சல்லிக்கட்டா? ‘ஜ’ல்லிக்கட்டா? – தி.வே. விசயலட்சுமி
சல்லிக்கட்டா? ‘ஜ‘ல்லிக்கட்டா? தமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஓட்டித் தமிழகமெங்கும் சிற்றூர்ப் புறங்களில் பல்லாண்டுகளாய் நடந்து வரும் வீர விளையாட்டே சல்லிக்கட்டு என்பது. தமிழர்தம் முல்லைநில நாகரிகத்தில் பெண்ணை மணக்க விரும்பும் ஆடவர். மணப்பெண்வீட்டாரின் காளையை அடக்கி மணப்பர் என்று சங்க இலக்கியம் கொண்டு அறிகிறோம். இன்று இவ்வீரவிளையாட்டு திருமணத்துடன் உறவு கொள்ளாமல் இளைஞர்தம் மறப்பெருமையைப் பாரோர்க்கு எடுத்துக்காட்டும் ஒன்றாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய கட்டுத் தொகை முடிவு செய்யப்படும்….