இலங்கைச் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐவரின் உடல்நிலை கவலைக்கிடம்
இலங்கையில், தங்கள் விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சிறைவாசிகளில் ஐவருடைய நிலைமை பாதிப்புக்குள்ளாகி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் மூவர் சிறைப்பிரிவு மருத்துவமனையில் பிப்பிரவரி 25 அன்று சேர்க்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இசைவான மறுமொழி அரசிடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்ச் சிறைவாசிகளில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் பதினைந்து பேரும், அநுராதபுரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் இரண்டு பேரும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திச்…
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – நேரடி அறிக்கை!
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – நேரடி அறிக்கை! அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியபோதும்… ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தபோதும்… தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணஅவை உறுப்பினர்களும் குதிகால் பிடரியில் அடிபட கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கும், அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் ஓடோடிச் சென்றார்கள். ஓட்டம் என்றால் அப்படியோர் ஓட்டம்! இவர்கள்…