கலைச்சொல் தெளிவோம்! 126 : கொழு-awl
நாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது. கொழு-awl – இலக்குவனார் திருவள்ளுவன்