அகநானூற்றில் ஊர்கள் : 5/7 – தி. இராதா
(அகநானூற்றில் ஊர்கள் 4/7 இன் தொடர்ச்சி) அகநானூற்றில் ஊர்கள் : 5/7 கானல்அம்பெருந்துறை தித்தன் வெளியன் என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை, “……..தித்தன் வெளியன் இரங்கு நீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை” (அகநானூறு152, 210, 280, 300) என்ற அடிகள் மூலம் அறியலாகிறது. குடந்தை வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னரின் குடந்தை என்பதை,…