மதநல்லிணக்கக் கட்டடங்கள்   இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள், தர்ஃகாக்கள், அகழாய்வுகள் மூலம் கண்டறிந்தவை, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வரலாற்று உருவாக்கத்திற்கு அடிப்படைச்சான்றுகளாய்…