தோழர் தியாகு எழுதுகிறார் 192 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?- தொடர்ச்சி) கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்! இனிய அன்பர்களே! உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அவர்கள் தமக்கான சமய வழிபாட்டுக் கூடங்களை அமைத்துள்ளார்கள். அவை அவர்களின் பன்மையப் பண்பாட்டின் அடையாளங்களாக விளங்கி வருகின்றன. நான் அயல்நாடுகள் செல்லும் போது நேரம் கிடைக்கும் போது அவற்றைச் சென்று பார்ப்பதுண்டு. சிலநேரம் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளே அங்கு நடப்பதும் உண்டு. அப்படித்தான் கடந்த 1994ஆம் ஆண்டு வட…