கலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid
கோளுதிரி – asteroid விண்ணியலிலும் கணக்கியலிலும் அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்பவியலிலும் புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச் சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே பொருத்தமாகும். கோள் பற்றி 105 இடங்களிலும் கோள்மீன் 5 இடங்களிலும் சங்க இலக்கியங்களில் வருகின்றன. உதிர்பு(4), உதிர்க்கும்(4), உதிர்த்த(20), உதிர்த்தலின்(1), உதிர்த்து(3), உதிர்தரு(1), உதிர்ந்த(6), உதிர்ந்தன(1), உதிர்ந்து(4), உதிர்ந்தென(1)உதிர்ப்ப(3), உதிர்பு(2), உதிர்வ(1), உதிர்வன(5), உதிர்வை(1), உதிர (22) என உதிர் தொடர்பான சொற்கள் உள்ளன. உதிர் + இ…