சுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 4 கோழியும் குழந்தையும் உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத் தெருவோடிக் கூவிநிற்கும் தேவைக்(கு)-இருளில் இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும் விரைகுழவி கோழியு மொன்று . பொருள்-கோழி, குழந்தை கோழிபோலவே குழந்தையும் மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும். தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும் உணவு உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும். இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.