இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 1.6 படையல் கவிதைகள் தன்னை ஆதரித்து, உதவி செய்த பெருமைக்குரியவர்களுக்கு தாம் இயற்றிய நூல்களைப் படையலாக்கியுள்ளார் இலக்குவனார். இந்நூல்களின் முகப்பில் படையல் கவிதையை வெளியிட்டுள்ளார் கவிஞர். விருதுநகர் கல்லூரிப் பணியின்றும் வெளியேற்றப்பட்ட பின் கவிஞரை ஆதரித்தவர் புதுக்கோட்டை வள்ளல் எனப்படும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார். அவருடைய தம்பி கோவிந்தசாமி, அண்ணன் கருத்து அறிந்து செயல்படுபவர். அன்னாருக்குத் தாம் எழுதிய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி) 18 தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார். இதனை, ‘ தேர்தல் என்றால்…