மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும் 110 தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர். கோவிந்த சாமியாம் கூறும் தம்பி கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி அறநெறி போற்றிடும் அரிய வணிகர். புன்னகை தவழும் நன்னல முகத்தர். 115 அடக்கமே வடிவம்; அன்பே பண்பு அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர் உடலால் இருவர் உளத்தால் ஒருவர் பகுக்க முயல்வோர் பயன்பெறத்…