(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் :7 /17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 8/17   சமயம் புதுப்புதிய சுவைதன்னைப் புலனாக்கும் தமிழ்மொழிதான்மதிப்புள்ள சங்கநூல் மாண்புடைய தம்மானைமதிப்புள்ள சங்கநூல் மாண்பிருக்கப் பித்தானமதச்சண்டை நம்தமிழில் மண்டியதேன் அம்மானைமண்டியதவ் ஆரியர்செய் மயக்கத்தால் அம்மானை       (36) உய்வதனைக் கருதி உயர்ந்திடுநம் தமிழ்முன்னோர்தெய்வ வணக்கந்தாம் செய்துவந்தார் அம்மானைதெய்வ வணக்கந்தாம் செய்பவரை இன்றுசிலர்எய்வதுபோல் கடுமொழியால் எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்க்கலாம் ஆரியர்கள் ஏய்ப்பதையே அம்மானை       (37) இயற்கை வடிவுடைய இறைவனை முன்தமிழர்இயற்கை முறைக்கேற்ப ஏத்தினர்காண்…