இவனா தமிழன் ? இருக்காது யானைக்குப் பூனை பிறக்காது! இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு! தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான்! வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்! வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான் கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக் கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக் கடிந்தால் உடனே தூற்றுகிறான்! தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை தானெனும் வீம்பில்…