மும்பையில் கூடுவோம்! – உலகத் தமிழர் பேரமைப்பு
மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய “உலகத் தமிழர் பேரமைப்பு ” சார்பாக மும்பை தாராவி இல் உள்ள காமராசர் ஆங்கிலப் பள்ளியில் வரும் சூன் 15ஆம் நாள் மாலை 6 மணி முதல் நூல் வெளியீட்டு விழாவும் ஆவணப்படம் திரையிடலும் நடக்க இருக்கிறது. இந் நிகழ்ச்சியில், பவா சமுத்துவன் எழுதிய “மேதகு பிரபாகரன்- வாழ்வும் இயக்கமும்” , தோழர் பொழிலன் எழுதிய “தமிழ்த்தேசம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழாவும் ,செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது…
பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின் வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 67. இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், இன்று 29.12.13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கௌதமன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். செனாய் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கௌதமன் உடலுக்குத்…