பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்!
கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்
மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்; ‘ஓர் அரிமா நோக்கு’ நூலினைப் பேராசிரியர் வெளியிட்டார். புரட்சிக் கவிஞர் விழாவினைப் பெரியார் திடலில் நடத்த காரணம் கவிக்கொண்டல் : தமிழர் தலைவர் புகழாரம்! சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் ஆடி 14, 2047 / சூலை 29, 2016 மாலை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் சிறப்பு விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
கவிக்கொண்டல் சிறப்பு விழா, சென்னை
ஆடி 14, 2047 / சூலை 29, 2016 உமாபதி கலையரங்கம், அண்ணாசாலை, சென்னை 600 002 கலைமாமணி மா.செங்குட்டுவன் எண்பதாம் அகவையின் தொடக்க விழா அவரின் ‘ஓர் அரிமா நோக்கு’ நூல் வெளியீடு மீண்டும் கவிக்கொண்டல் இதழின் வெள்ளி விழா நிறைவு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் ஆசிரியர் கி.வீரமணி மதிப்புமிகு சா.கணேசன் பொறி. மு.மீனாட்சிசுந்தரம்
பா.கலையரசியின் ஆய்வு நூல் வெளியீடு
மாசி 08, 2047 / பிப்.20, 2016 மாலை 6.00 “முனைவர் மு.பி.பா.வின் தமிழ்ப்பணிகள்” முனைவர் பா.கலையரசி எழுதிய ஆய்வுநூல் நூல் வெளியிட்டுச் சிறப்புரை – பேரா.க.அன்பழகன்
அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் மிகுதியாம்! – க.அன்பழகன்
அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் நாம் பெற்றுள்ளனவற்றிலும் மிகுதியாம்! அவ்வகையில் தமிழில் பிறந்த சங்கத் தொகை நூல்களின் செய்யுள்களுக்கும், எப்பாலவரும் போற்றும் அய்யன் திருவள்ளுவரின் முப்பாலாம் திருக்குறளுக்கும் முற்படத் தோன்றிய ஒல்காப்புகழ் தொல்காப்பியம் ஓர் ஒப்பற்ற இலக்கண நூலாய்த் திகழ்வதாம். “இலக்கியம் கண்டதற்கென்றே இலக்கணம்” கூறலாகும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அதற்கு முன்னரே தமிழில் தோன்றி வழங்கிய செய்யுள் இலக்கியங்களும் இலக்கண நூல்களும் மிகப் பலவாகும். முத்தமிழும் வளர்த்த முச்சங்கங்களுள், தலை, இடைச் சங்கங்கள் இரண்டின் காலத்திலும் வழங்கிப் பின்னர்க் கடல்கோள் முதலானவற்றால் அழிவுற்ற…
‘இனமானப் பேராசிரியர் வாழ்வும-தொண்டும்’ என்ற நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம் சார்பில் பேராசிரியர் அ.ர.சனகன், முனைவர் ந.க.மங்கள முருகேசன் ஆகியோர் எழுதிய ‘இனமானப் பேராசிரியர் வாழ்வும் – தொண்டும்’ என்ற நூல் வெளியீட்டு விழா திராவிடர் கழகத்தலைமையகமான சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஆடி 17, 2046 / ஆக.2.8.2015 மாலை 6 மணிக்கு வெகு சிறப்புடன் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது – க.அன்பழகன்
“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது . . . .மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணீனீயமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; “பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும்…
தொல்காப்பியம் ஒரு முதல்நூல் – க.அன்பழகன்
தொல்காப்பியம் ஒரு முதல்நூல் . . . எனவே, தொல்காப்பியத்திற்கு முதல்நூல் அகத்தியம் என்று கொள்வதற்கு இடமில்லை. மாறாகச் செய்யுள் வழக்கினும், உலகோர் வழக்கினும் பல காலமாய் இடம்பெற்ற பல செய்திகளும், தொல்காப்பியரால் எடுத்தாளப் பெற்றிருத்தல் இயல்பே எனலாம். ஆயினும், எழுத்து, சொல், பொருள் மூன்றன் இலக்கணமும் விவரித்திடும் விரிவானதொரு நூல், அக்காலத்தில் வேறு இல்லையாதலின் அதுவே முதல்நூல் ஆகும் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின்) தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம் 11