வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்
வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள் சித்திரை முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக்…