அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!
அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்! தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன், இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018) காலை இயற்கை எய்தினார். நீரிழிவு நோயால் இடக்கால் பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர் நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார். ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் மரணமுற்றார்….
மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்
மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும் குறைகளையும் வெளிப்படுத்தி வருபவரே மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன். நூலாசிரியர், இதழாசிரியர், கதை எழுத்தாளர், பதிப்பாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு அணிசெய்யும் வகையில் தொண்டாற்றி வருபவர். திருவாரூர் (தஞ்சாவூர்) மாவட்டம் கடலங்குடியில் ஆவணி 24, 1972 / 8.9.1941 அன்று பழனியப்ப(பிள்ளை)-தங்கபாப்பு இணையரின் திருமகனாகப் பிறந்தார். இவர் மனைவி தமிழறிஞர் முனைவர் தாயம்மாள் அறவாணன் தமிழ்நூல் படைப்பாளர். மகன் அறிவாளன்,…
தமிழ்ச்செல்வி தமிழமல்லன் மணிவிழா, புதுச்சேரி : ஒளிப்படங்கள்
பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016 மாலை 6.30 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா
தை 25, 2047 / பிப்.08, 2016 மாலை 5.00 சென்னை
அறவாணன் விருதுகள் வழங்கு விழா
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா.முனைவர் க.ப. அறவாணன் (பிறப்பு: ஆடி 25, 1972/ஆகத்து 9, 1941) தம் பிறந்த நாளில் ஆன்றோர்களையும் சான்றோர்களையும் விருது அளித்துப் பாராட்டி வருகிறார். இவ்வாண்டு, தமிழ்ச்செயல்தொண்டர் நா.அருணாசலம், முனைவர் இராம.இராமநாதன், முனைவர் வேலூர் ம.நாராயணன் ஆகிய சான்றோர்கள் விருதுகள் பெற்றுள்ளனர். விழாவின் பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் சில :-
அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!
அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில் இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…