மாற்றத்திற்கான பேரணி – நாம், நமக்காக!
மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 காலை 10.00 சென்னை
தாவணி நாள் கொண்டாடுக! – சகாயம் வேண்டுகோள்
கூட்டாலை(கோவாப்டெக்சு) நிறுவனம் உலக மகளிர் நாளான மார்ச்சு 8 அன்று தாவணிநாள் கொண்டாட முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் வேட்டி நாள் கொண்டாடியதுபோல், மார்ச்சு 8 வரையிலான ஒரு நாள் தாவணி நாள் கொண்டாடும்படி அதன் மேலாண் இயக்குநர் சகாயம் இ.ஆ.ப. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கேற்ப கூட்டாலை விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வேட்டிநாளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுபோல், கல்லூரி மாணாக்கியரிடமும் பல்கலைக்கழக மாணாக்கியரிடமும் தாவணி நாளுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது