கடல்வழி போக்குவரவினை முதலில் கண்டறிந்தவர் தமிழரே!

    தமிழ்வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும் அதனை அடுத்து, ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும், அரண்களாக கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிலிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள் மதிலில் அமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையில் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற், சுண்ணாம்பு சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையும் உடையவனாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர்…

தமிழர்இசையின் சிறப்பைச் சங்க நூல்கள் இயம்புகின்றன.

  காலத்தால் முந்தியும் கருத்தால் நிறைந்தும் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலை நன்கு எடுத்துக் காட்டியும் இலக்கியச் செம்மையில் சிறந்தும் விளங்குகின்ற சங்கப் பாடல்கள் இசைச் செய்திகளைப் பலவாறு பற்பல இடங்களில் கூறியுள்ளன. கிறித்துவுக்கு முன்னர் இரண்டும் பின்னர் இரண்டுமான நான்கு நூற்றாண்டுகளில் தமிழர் இசை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து உணரும் சிறந்த வாயில்களாகச் சங்ககால இலக்கியங்கள் விளங்குகின்றன. பண்ணும் பாடலும் பண்பட்டு வளர்ந்த நிலையை நன்குணருமாறு பல செய்திகளைச் சங்கச் செய்யுள்கள் தாங்கி மலர்ந்துள்ளன. – முனைவர் ஏ.என்.பெருமாள்: தமிழர்…

மாமூலனார் பாடல்கள் 27: சி.இலக்குவனார்

(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) உஎ. “ஆண்டு அவர் நீடலர்” – தோழி சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   “சென்றவர் என்று வருவரோ” என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றாள் தலைவி, உயிர் அனையதோழி வாளாய் இருப்பாளா? ஆறுதல் கூறுகின்றாள்.   “தோழி! வருந்தேல், ஏதேனும் தொழில் செய்தல் வேண்டும். சோம்பி இருத்தல் ஆகாது.’ என்ற நினைப்பு அவரை வேற்று நாட்டுக்குச் செல்லவிடுத்தது. அவர் சென்ற இடத்தின் தன்மையைக் கேள். மலைமேடுகளில் காடுகளைத் திருத்தி விதைத்து…

மாமூலனார் பாடல்கள் 23: சி.இலக்குவனார்

(வைகாசி 25,2045 / சூன் 8, 2014 இதழின் தொடர்ச்சி) உங. பெற்றதும் திரும்புவர் சற்றும் வருந்தேல் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பொருள் தேடச் சென்றபின் அவன் பிரிவை ஆறறியிருக்க முடியாது தலைவி வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறி விரைவில் திரும்பி விடுவானென்று உறுதி கூறுகின்றாள்) தோழி: அம்ம! நின் கை வளையல்கள் கழன்று கழன்று விழுகின்றனவே. எவ்வளவு இளைத்துப்போய் இருக்கின்றாய்? தலைவன் பிரிந்து சென்றதால் அல்லவா இவ்வளவு வாட்டம். தலைவி: ஆம்! என்…

மாமூலனார் பாடல்கள் – 16 : சி.இலக்குவனார்

(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. இமயச் செவ்வரை  மானும் கொல்லோ! – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்    பெறலரும் தலைவியைச் சிறப்புற மணந்த தலைவன் சென்றான் பொருள் தேட. ஏன்? பொருளின்றி இரந்தோர்க்கு ஈயாமல் இருத்தல் இழிவென்று கருதி, பெருஞ்செல்வம் தேடச் சென்றான். தலைவன் பிரிவால் தலைவி வருந்தினாள். தோழியர் கூடினர். ஆறுதல் கூறுகின்றனர்.  தோழி: அவர் தேடச் சென்ற பொருள் நம் தலைவியை விட உறுதி தரக்கூடியதா?  இன்னொரு…

மாமூலனார் பாடல்கள் – 15 : சி.இலக்குவனார்

 (பங்குனி 30, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) கரு “நந்தன் வெறுக்கை  பெற்றாலும் தங்கார்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பிரிந்தான். தலைவி வருந்தினாள். தோழி ஆற்றினாள்)  தலைவி: தோழி! பாணரை விடுத்தோம். புலவர்கள் சென்றார்கள். தலைவனை அடைந்தனரோ இல்லையோ?  தோழி: அம்ம! அவரை அடைந்திருப்பார். உன் துயர் நிலையைக் கூறுவர். அவரை எண்ணி எண்ணி இளைத்துள்ள நிலையை எடுத்து இயம்புவர்.  தலைவி: என்ன கூறியும் என்ன பயன்? அவர் எந்நிலையில் உள்ளாரோ?…