ஒளவையார்:1: ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள் – 10 2. ஒளவையார் ‘-ஒண்டமிழே!பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1] எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது! ———–[1]. தமிழ்விடுதூது———- உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய…