இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 28 அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இருந்துள்ளன. பனை என்னும் சொல் அளவுப் பெயராகவும், கா என்னும் சொல் நிறைப்பெயராகவும் வழங்கியுள்ளன. யாவர் என்னும் சொல் யார் என்றும், யாது என்னும் சொல் யாவது என்றும் மருவி வருவது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள வழக்காகும். அழன், புழன் என்ற இரு சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்தன; பின்னர் மறைந்துவிட்டன. பல,…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 7. பழந்தமிழ் நிலை தமிழ்மொழியின் தொடக்க காலத்தில் ஐ, ஔ நீங்கிய பத்து உயிர்களும், ற, ன நீங்கிய பதினாறு மெய்களும் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். ஐ என்பதை அ இ எனவும் அய் எனவும், ஔ என்பதை அ உ எனவும் அவ் எனவும் எழுதியும் ஒலிக்கலாம் என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். ஆகவே ஐ யும் ஔ வும் கூட்டொலிகளாகின்றன. ற என்பது ல்+த சேருங்கால் உண்டாகக் காண்கின்றோம். புல்+தரை=புற்றரை. ன…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ சங்கம் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றை அறிஞர் வையாபுரிப் பிள்ளையும் ஏற்றுக் கொள்கின்றார். சங்கம் தோன்றிய பின்னர், புதிதாக இயற்றப்படும் நூல்கள் சங்கப் புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்படுதல் வேண்டும் என்ற ஒரு விதியுமிருந்தது என்பதை யாவரும் அறிவர். சங்கம் தோன்றுவதற்கு முன்னர் புதிய நூல்கள் அரசர் கூட்டும் அவையில் அரங்கேற்றப்பட்டன. தொல்காப்பியம் நிலந்தரு திருவின் நெடியோன் அவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.1 ஆதலின் தொல்காப்பியம் சங்க காலத்திற்கு முற்பட்டதாகும் என்று தெளியலாம். ஆதலின் தொல்காப்பியர் ++…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 25
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இவர்கள் ஆரியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்தவர்களாவார்கள் என்று கூறலாம். ஒரு சிலர் அவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய காலத்திலோ அக்காலத்தை ஒட்டிப் பின்போ வாழ்ந்திருக்கலாம். சிலர் பெயர்களும் பாடல்களுட் பயின்ற சில சொற்களும் வடமொழியைச் சார்ந்தன என்று கருதப்பட்டன. தேவன், பூதன், கீரன் முதலியனவற்றை வடசொற்கள் என்றே கருதியோரும் உளர். இவையெல்லாம் தூய தமிழ்ச்சொற்களே. தேவன் என்ற சொல் இனியன், விருப்பத்திற்குரியன், இடத்திற்குரியன் என்னும் பல பொருளினது. பூதன், பூதம் என்ற தமிழ்ச் சொல்லினடியாகத்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ புலவர் பெயர் பாடல் தொகை 100. கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் 1 101. கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் 1 102. கிள்ளிமங்கலம்கிழார் 4 103. கீரம் கீரனார் 1 104. குடவாயிற் கீரத்தனார் 18 105. குட்டுவன் கண்ணனார் 1 106. குட்டுவன் கீரனார் 1 107. குதிரைத் தறியனார் 1…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ –22 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இனி இயற்பெயரால் அறியப்பட்டுள்ள புலவர்களையும் அவர்கள் இயற்றியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பாடல் தொகைகளையும் காண்போம். புலவர் பெயர் பாடல் தொகை 1. அகம்பல்பாலாதனார் 1 2. அஞ்சியத்தை மகள் நாகையார் 1 3. அஞ்சில் அஞ்சியார் 1 4. அண்டர் மகன் குறுவழுதியார் 2 5. அதியன் விண்ணத்தனார் 1 6. அந்தில் இளங்கீரனார் 1 …