தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே! திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக! பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது. தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர். நமது மொழியும் இனமும்…