தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி) அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு): “மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும் ஊக்கத்திற்கும் ஆக்கம் தரும் வகையில் பாடம் பயிற்றிய நல்லாசிரியர். எத்தனை ஐயக் கேள்விகட்கும் விடை தருவார். மாணவர் நலங்கருதும் மாண்பினர்; ஆசிரியர்…