நாள் கணக்கிடும் முறை – சி.இலக்குவனார்
நாள் கணக்கிடும் முறை நள்ளிரவு அரைநாள் என்று குறிப்பிடப்படுகின்றது. தமிழர்கள் நண்பகல் தொடங்கி மறுநாள் நண்பகல் வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டதாக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “நள்ளிரவை’ அரைநாள் என்பது அதை வலியுறுத்துகின்றது. நள்ளிரவிலிருந்து மறுநாள் இரவு வரையில் ஒருநாள் என்ற ஆங்கிலேயர் கணக்கிடும் முறையும், ஞாயிற்றுத் தோற்றம் தொடங்கி மறுநாள் ஞாயிற்றுத் தோற்றம் வரையில் கணக்கிடும் இன்றைய முறையும், பண்டைத் தமிழர் முறையுடன் ஒப்பிடுமிடத்து, குறைபாடுடையன என்று தெள்ளிதில் விளங்கும். -செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: சங்க…
‘அகம்’ என்றால் என்ன? – சி.இலக்குவனார்
‘அகம்’ என்றால் என்ன? ‘அகம்’ என்றால் என்ன? ஒத்த அன்பினையுடைய தலைவனும் தலைவியும் தனித்துக் கூடுகின்ற காலத்துத் தோன்றி, மன உணர்ச்சியால் நுகரப்படும் (அநுபவிக்கப்படும்) இன்பம், அக் கூட்டத்தின் பின்னர், அவ்வின்பம் இவ்வாறு இருந்தது எனச் சொல்லால் விளக்கிக் கூற முடியாமல் எப்பொழுதும் உள்ளத்தே நிகழும் உணர்ச்சியால் நுகரப்படுவதால் ‘அகம்’ எனப்பட்டது. அகம் உள், உள்ளம்: அதுபற்றி எழும் ஒழுக்கத்தை ‘அகம்’ என்று கூறினர். எளிமையாகக் கூறினால் காதல் இன்பம் என்பதாகும். காதலின்பம் உணர்ச்சி வயத்தது; உணர்ச்சி உள்ளத்தைப் பற்றியது. பண்டைத் தமிழ்ப்…
உலக அமைதியை நிலைநாட்டத் துணைசெய்வன சங்க இலக்கியங்களே!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள் சங்கமாகக் கூடித் தமிழைப் போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொலை நூல்களைக் கொண்டது. இவை, படிப்போர் உள்ளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் துணை செய்வன. இவற்றைப் பொருள்வகையானும் திணை வகையானும் பாவகையானும் அடி வகையானும் பகுத்துத் தொகுத்தனர் நம் முன்னர். இவற்றை இயற்றிய புலவர்களின் பெயர் தெரிந்தவர் நானூற்று எழுபத்து மூவர். பெயர் தெரியாதவர்களும் சிலர் உளர்….