மாமூலனார் பாடல்கள் – 21 : சி.இலக்குவனார்
(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) உக. “சில நாள் பொறுத்திருப்பாய்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவனும் தலைவியும் பகற்குறியினும் இரவுக் குறியினும் கண்டு மகிழ்ந்து கலந்து உரையாடிக் காதலைப் பெருக்கிவிட்டனர். தலைவியின் தாய் தலைவியின் ஒழுக்கத்தை உற்று நோக்கிக் கண்ணும் கருத்துமாய்க் காவல்புரிந்தாள். சிறைகாப்பு எவன் செயும். தலைவி சிறைப்பட்டவள் போல் ஆனாள். தலைவன் இந்நிலையை உணர்ந்து தலைவியைத் தன் ஊர்க்கு அழைத்துச் சென்று மணப்பதாகக் கூறினான். அவ்விதம்…
மாமூலனார் பாடல்கள் – 20 : சி.இலக்குவனார்
(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) 20. சென்றோர் அன்பிலர் – தலைவி தலைமகன் பிரிந்த பின்னர், தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி! அவர் அன்பு அற்றவர் என்றுதான் நினைக்கிறேன். உயர்ந்து வளர்ந்துள்ள அடிமரங்களுடைய சிவந்த தளிர் பொருந்திய இருப்பை மரங்களிலிருந்து, தந்தத்தைக் கடைந்து செய்தால்போன்ற பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அவர் செல்லும் வழிகளில், அங்குக் கரடிக்கூட்டம் – குட்டிகளை ஈன்ற பெண் கரடிகள் – ஆட்டு மந்தையைப்…
மாமூலனார் பாடல்கள் – 16 : சி.இலக்குவனார்
(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. இமயச் செவ்வரை மானும் கொல்லோ! – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பெறலரும் தலைவியைச் சிறப்புற மணந்த தலைவன் சென்றான் பொருள் தேட. ஏன்? பொருளின்றி இரந்தோர்க்கு ஈயாமல் இருத்தல் இழிவென்று கருதி, பெருஞ்செல்வம் தேடச் சென்றான். தலைவன் பிரிவால் தலைவி வருந்தினாள். தோழியர் கூடினர். ஆறுதல் கூறுகின்றனர். தோழி: அவர் தேடச் சென்ற பொருள் நம் தலைவியை விட உறுதி தரக்கூடியதா? இன்னொரு…
மாமூலனார் பாடல்கள் – 15 : சி.இலக்குவனார்
(பங்குனி 30, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) கரு “நந்தன் வெறுக்கை பெற்றாலும் தங்கார்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பிரிந்தான். தலைவி வருந்தினாள். தோழி ஆற்றினாள்) தலைவி: தோழி! பாணரை விடுத்தோம். புலவர்கள் சென்றார்கள். தலைவனை அடைந்தனரோ இல்லையோ? தோழி: அம்ம! அவரை அடைந்திருப்பார். உன் துயர் நிலையைக் கூறுவர். அவரை எண்ணி எண்ணி இளைத்துள்ள நிலையை எடுத்து இயம்புவர். தலைவி: என்ன கூறியும் என்ன பயன்? அவர் எந்நிலையில் உள்ளாரோ?…
மாமூலனார் பாடல்கள் – 14 : சி.இலக்குவனார்
(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) கச. மொழிபெயர் தேயத்தராயினும் நல்குவர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ( பிரிவின்கண் வேறுபட்டுள்ள தலைவியும் தோழியும்) தோழி: ஏடி! இவ்விதம் வாட்டமுற்று வருந்துகின்றாய். மேனி பொலிவு அழிந்துவிட்டதே. தலைவி: நீகூட இதன் காரணத்தைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாயோ? தோழி: இல்லையம்மா! சென்றவர் திரும்பும் வரையில் ஆற்றியிருத்தல்தானே நமக்கு அழகு. தலைவி: ஆமாம். அவர் எந்த நாட்டுக்குச் செல்வதாகக் கூறினார்….
மாமூலனார் பாடல்கள் – 13 : சி.இலக்குவனார்
(பங்குனி 09, தி.ஆ.2045 / 23, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) 13.பொருள்வயின் நீடலோ இலர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பொருள்தேடச் சென்றபின் வருந்தும் தலைவியும் ஆற்றும் தோழியும்) தோழி : அம்ம! ஏன் இப்படி நினைந்து நினைந்து வருந்துகின்றாய். கண்ணீர் ஆறாகப் பெருகிவழிந்தோடுகிறதே. தலைவி : இளமை நிலைத்து நில்லாது என்பதை அவர் அறியாதாரா என்ன? தோழி : ஏன் அவர் அறியமாட்டார்? நன்றாக அறிவார்! தலைவி : பொருளை…
நயம் மிக்கச் சங்கக்கவியும் கற்பனை வறண்ட இடைக்காலக் கவியும் – பேரறிஞர் அண்ணா
கையில் ஊமையர் ஒரு மாதத்திற்கு முன் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில், ஓர் உவமையைப் படித்தேன். இந்தக் காலத்தில் கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வேறுபாட்டைப் பாருங்கள்! இந்தக் காலத்துப் புலவர்கள் எந்தக் கருத்தை ஓர் அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் கூறி விட்டார். அந்த அடிதான் ‘கையில் ஊமன்’ என்பதாகும். ஒரு தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப் பாருங்கள்! கட்டுங்கடங்காத காளை; …
மாமூலனார் பாடல்கள் – 11சி.இலக்குவனார்
–சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (சன.26, 2014 இதழ்த் தொடர்ச்சி) தோழி! வருந்தாதே – “வினையே ஆடவர்க்கு உயிர்” என்ற கோட்பாட்டில் சிறந்த உள்ளம் கொண்டவனாய், தலைவன் வெளியூர் சென்றுவிட்டான். தலைவி தலைவன் பிரிவால் நாள்தோறும் மெலிந்து கொண்டே இருந்தாள். தோழி ஒரு நாள் உற்று நோக்கினாள். ஆறுதல் கூறத் தொடங்கிவிட்டாள். “தோழி! வருந்தாதே, குவளை மலர் போன்ற கண்கள் தம் அழகை இழந்துவிட்டனவே, தொய்யில் எழுதி அழகுடன் விளங்கும் உன் தோள்கள் இன்று என்ன இப்படிக் காணப்படுகின்றன?…
சங்க இலக்கிய அறிஞர் வைதேகி அம்மையாரின் பட்டறை- தேவகி
சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை (வட கரொலினா) சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனும் ஐயத்திற்கான விடை தேடுமுகமாக, வட கரொலினாவில் திருமதி. வைதேகி அவர்கள் நடத்திய ‘சங்க இலக்கியம் படிப்பது எப்படி’ என்கிற பயிற்சிப் பட்டறை தொடங்கியது. எளிமையான தோற்றம், செழுமையான இலக்கிய அறிவு, கற்பவர் உள்ளம் கவர கற்பிக்கும் திறன் என அனைத்தும் ஒருங்கே அமைந்த தமிழ்ப் பெண் திருமதி. வைதேகி என்றால் அது மிகையாகாது. முதல் நாள் பட்டறை: சங்க இலக்கியத்தை அவர் எப்படிப் படிக்கத் தொடங்கினார்…
மாமூலனார் பாடல்கள் – 10
–சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) “நம் உயர்வை நினைந்தனர் காதலர்” – தோழி (தலைவியும் தோழியும்) தலைவி: தோழி! அவர் சென்றுவிட்டாரா? நேற்று அவர் உரையாடும் போதே அதன் குறிப்பு . . . . . தோழி: அவர் பிரிந்து பொருள் தேடச் செல்வார் என்ற குறிப்புத்தானே? தலைவி: ஆம். தோழி: உங்களிடத்தில் “நான் போய் பொருள் தேடி வருகிறேன்” என்று கூறினால் “நானும் புறப்படுகிறேன்” என்பீர்கள். அதனால்தான் குறிப்பால் உணர்த்திவிட்டுச் சென்றார். தலைவி: அவர்…
மாமூலனார் பாடல்கள் – 6
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ரு. விழுச்சீர் வேங்கடம் பெறினும்-? ஓர் இளைஞன் கருத்திற்கு ஒத்த காதலியை மணந்தான் மணஇன்பம் நுகர்ந்துகொண்டு இருக்கின்றான். ‘பிறர்க்கென வாழவேண்டும்’ என்ற பெரியோர் உரை நினைவிற்கு வருகின்றது. “மற்றவர்க்கு உதவிசெய்தல் வேண்டும். உதவி செய்வதற்குப் பொருள் மிக வேண்டும் அப்பொருள்தானும் நம்மால் தேடப்பட்டபொருளாக இருத்தல் வேண்டும்.” என்று நினைக்கின்றான். ‘தலைவி’ ‘அன்ப’ “எவ்வளவோ உண்மைகள் இருக்கின்றன. தாங்கள் எதைக் கருதுகின்றீர்களோ?” “எவ்விதத்திலும் மறுக்கமுடியாத எவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை ஒன்று…
