தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ!   பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக  நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம்.   ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…

சசிபெருமாள் மறைவும் மதுவிலக்கும்

மதுவிலக்குப்போராளி சசிபெருமாள் மறைவும் முழுமையான மதுவிலக்கும் அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 927)   தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தவர் காந்தியவாதி செ.க.சசிபெருமாள். பலமுறை உண்ணாநோன்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த (தி.பி.2045 / கி.பி. 2014ஆம்) ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கினை வலியுறுத்தி 36 நாள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இவர் விளம்பரத்திற்காக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவில்லை. கட்சி அரசியல் நோக்கிலும் இதனைச் செய்ய வில்லை. வாணாளெல்லாம்…