முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! முள்ளி வாய்க்காலில் முடங்கிய தமிழினம், துள்ளி மண்மீட்கத் துணிவுடன் எழுந்து, கள்ளச் சிங்களர் கயமைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் புலன்கள் ஓயாது! முதிர்ந்த அறிவோடு தமிழினம் காத்திடும், மற்றொரு தலைவனை மீண்டும் பெற்று, மாற்றுச் சிந்தனை அரசியல் செய்து, முயன்று போராட்டம் தொடர்ந்து நடத்தினால், முன்பு வாய்க்காத மாபெரும் வாய்ப்புகள் மலர்ந்து மணம்வீசி முகிழ்க்கும் ஈழம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சடலம் ஆக்கிச் சிதைத்தானோ? ஐயோ! சிதைத்துச் சடலம் ஆக்கினானோ? சுவரில் அடித்த செம்மண் கலமாய், சிதறிக் கிடந்த உடல்கள் மீது, சிறுநீர் கழித்தும் அடங்கா வெறியில், சிரங்களை அறுத்து ஒருபுறம் குவித்து, சித்திரம் போன்ற நம்குலப் பெண்களின், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நீசன், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நாமும் செய்வ தறியாது திகைத்தோமே! சிதிலம் அடைந்த உயிர்கள் கண்டு, விதியென் என்றொதுங்கி  வீழ்ந்திட மாட்டோம், உதிரம் கொதித்துத் தமிழன்னை அருளால், விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சிறுவர், மழலையர்…

அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்க! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்க! நடித்து நடித்து நாட்டைத் தொடர்ந்து, கெடுத்து அழித்து, உழைக்கும் மக்களை, அடித்துப் பிழைக்க இலவசப் பொருட்களை அடுக்கி வைத்துக், கீழ்நிலை மக்களைக் குடிக்க வைத்துக் குடிக்க வைத்தே, முடக்கி வைக்கும் மடமை கண்டு, வெடித்து எழுந்து அரசியல் வக்கிரம், தடுத்து நிறுத்தித் தமிழன்னை நாட்டை, ஒடுக்கி வருத்தும் கபடத் திருடரை, அடித்துத் துரத்தி, அனைவரும் இணைந்து, அடுத்த நிலைக்கு அன்னை மண்ணை, எடுத்து உயர்த்திச் செல்ல வேண்டுமென, படித்த இளைஞர் கூட்டத்தை நோக்கித், தொடுத்து நிற்கிறேன் தமிழ்ச் சரங்களை!…

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! மோதியுமிழ் என்றுரைத்த பாரதியின் பாட்டினையும், சாதியில்லை என்றுரைத்த பெரியாரின் கூற்றினையும், காதினிலே வாங்காமல் கண் மூடிக் கிடப்பதனால், நீதிநெறி தவறாத தலைவர்கள் இல்லாமல், நாதியற்று நெஞ்சுடைந்து நற்றமிழன் சாகின்றான்!   போதிமர நீழல்கள் பொய்யாகிக் கருகியதால், தீதிலுயர் ஊழல்கள் தொய்வின்றிப் பரவியதால், சாதனைகள் செய்வதாகச் சத்தியங்கள் செய்து, சூதாட்டக் களமாகத் தேர்தலினை மாற்றி, வேதனையில் தமிழர்களை வீழவைத்துத் தூகிலேற்றி, பாதியுயிர் பறித்தெடுத்துக் குற்றுயிராய் நிற்கவைத்தார்! மீதியுயிர் போகும்முன் மனந்தெளிந்து எழுந்து, நூதனமாய்ச் சிந்தித்து நல்லவரைத் தேர்ந்து, சோதிநிறை நன்னிலமாய்…

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்!     வாக்குவங்கி அரசியலில் தோற்குது தமிழ்நாடு, தூக்கிலிங்கு தமிழன் மானத்தை ஏற்றிய துயர்பாரு, வாட்டுமிந்த நரகத்திலே வாழ்வதும் பெரும்கேடு, காக்குமந்தக் கடவுளுக்கும் இலவசம் தரும் நாடு! வாக்களித்த பின்னர் பாவம் கடவளுக்கும்கூட, சீக்கிரத்தில் கிடைத்திடுமே சுடலையின் திருவோடு!   வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! வெட்கமின்றி வெறுந்தொடையுடன், விரசமான இழிநடையுடன், வலம்வருவோர் எண்ணிக்கையோ தாண்டும் பலநூறு! வீட்டுக்குள்ளே சாக்கடையை ஓடவிட்டு அதிலே, வெற்றுடம்புடன் படுத்துறங்கி சுகங்கண்டதன் பலனாய், வான்புகழைக் கொண்டதமிழ் நாட்டுக்குள்ளே கடலாய், வக்கிரகுணச் சாக்கடைகள் வீதியெங்கும்…

நீரோடு நிலம் காப்பவனை ஆட்சியில் அமர்த்து! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தமிழினத்தின் பொற்காலம்! வாரங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான் உள்ளதடா, ஊரெங்கும் பரப்புரை ஒளிவேகம் எடுக்குதடா, கூரம்பாய் சிந்தனையை நீ கொஞ்சம் தீட்டிடடா, பாரங்கள் தீர்ப்பவர்கள் யாரென்று தேர்ந்திடடா! வீரங்கொண் டிதுவரையில் வசனங்கள் பேசியவர், கோரப்பல் சிரிப்பாலே கொடுங்கோலாய்ச் சீறியவர், வேரின்றி வீழ்கின்ற மரம்போலுன் காலடியில், பேரன்புச் சாயமிட்டு வீழ்வார்கள் புறந்தள்ளடா! ஈரங்கொண் டுள்ளத்தில் எரிமலையாய் வெடிப்பவனை, மாரெங்கும் தமிழனென்னும் பெருமிதத்தில் திளைப்பவனை, பாரெங்கும் தமிழகத்தின் பெருமைகளை வளர்ப்பவனை, நீரோடு நிலம் காக்கப் போராடும் நல்லவனை, யாரென்ன சொன்னாலும் தடுமாற்றம் இல்லாமல், ஆராய்ந்து பார்த்தபின் ஆட்சியில்…

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! அவலங்கள் ஆயிரம் அரங்கேற்றி, மக்களின் கவனத்தை வேறிடம் திசைமாற்றித் துணிவுடன், எவருக்கும் அஞ்சாமல் பாதகம் செய்வோரை, ஆண்டாண்டு காலமாய் ஆட்சியில் ஏற்றி, அடையாளம் தெரியாமல் போகின்ற தமிழா! அடிமைக்கும் அடிமைபோல் முதுகுத் தண்டுடைந்து, அல்லல்கொண் டழிவதிலே ஆனந்தம் கண்டாயோ? அடைகாக்கும் கோழிகூட அன்னியரைக் கண்டால், அடையாளம் கண்டுடனே தற்காத்துக் கொள்ளும்! அரைநூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும்கூட, அம்மிக்கல் போல்நீயும் அசையாமல் இருந்தால், அன்றாடம் மிளகாயை அரைத்துந்தன் தலைமீது, ‘ஆட்சி’ என்னும் பெயரிலே பூசுவார்கள் என்றும்! அறிவுக்கண் திறந்துந்தன்…

மதி படைத்த யானை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதி படைத்த யானை   குள்ளநரிகள் கள்ளவெறியில் தேர்தல் மணியை அடிக்குதாம், குருட்டு மறிகள் அந்த ஒலியில் பழசையெல்லாம் மறக்குதாம், குருதி வெறியில் நரிகளோடு கழுதைப்புலிகள் சேருதாம், குற்றுயிராய்க் குலையுயிராய் மறிகள்சாகு மென்றறிந்து, கொல்லும் அலகுக் கழுகுகளும் ஆசையோடு பறக்குதாம்! உள்ளம் குமுறிக் கண்டவர்கள் என்னசொல்லித் தடுத்த போதும், உண்மை அறியும் ஆற்றலின்றி ஊனமறிகள் சிரிக்குதாம்! மறிகளுக்கு அறிவையூட்டி, நல்வழியைக் காட்ட, மதிபடைத்த யானைஒன்று, தரை நடுங்க வருகுதாம்! தமிழ் நலம்பெருக்க வருகுதாம்! தன் நலம்மறந்து வருகுதாம்! தேர்தல் களம்வெல்ல வருகுதாம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! செம்மொழி பேசும் பெருமை பெற்ற, நம்மினம் அறிவில் வறுமை உற்று, ஐம்புலன் கருகி ஆற்றல் இழந்து, பொம்மையைப் போலப் பேசாமல் இருந்து, செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! இம்முறை யாவது சிந்தனை செய்து, சிம்மம் போலச் சீறி எழுந்து, செம்மை மிகுந்த தலைவன் கையில், நம்தமிழ் நாட்டின் ஆட்சியைக் கொடுப்போம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மங்கையரே வாருங்கள்! கண்ணகிபோல் சீறுங்கள்! கார்குழல் சுருட்டி அள்ளி முடித்து, குடும்பச் சுமைகளைக் கொஞ்சம் விடுத்து, கூர்மதி படைத்த பெண்கள் கூட்டம், கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! அறுவை சிகிச்சையில் பிள்ளையைப் பெற்று, ஆயுள் முழுவதும் அல்லல் உற்றிட, அரக்கத் தனியார் மருத்துவத் தொழிலே, அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து, அனைவர்க்கும் மருத்துவச் சேவையை முழுதாய், அகிலத் தரத்தில் வழங்கும் அரசை, அச்சம் இன்றித் தேர்ந்து எடுங்கள்! அரசுப் பள்ளியின் தரத்தைத் தாழ்த்தி, கல்வியை வணிகம் ஆக்கும் அரசை, “பரத்தை” என்று பழித்தலும் தகுமே!…

தாழ்த்தப்பட்ட தமிழினம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தாழ்த்தப்பட்ட தமிழினம்! உயர்ந்தவ ரென்றும், தாழ்ந்தவ ரென்றும், உனக்குள் பகைமையை ஊதி வளர்த்து, இயன்ற வரையினில் திருடிப் பொருள்சேர்க்க, இலக்குகள் வைத்துச் செயல்படும் கூட்டத்தை, வியந்து பாராட்டி, வாய் உலரப் பேசி, வறண்ட சுனைபோல வாடும் தமிழா! பயந்து பயந்து நீ வாழ்ந்தது போதும், பணிந்து குனிந்து நெஞ்சம் பாழ்பட வேண்டா. அயர்ந்து கண்தூங்கி அழிந்தது போதும், அடர்ந்த அமிலமாய்ப் பொங்கிட வேண்டும்! இயங்கித் துணிவோடு களத்தில் நம்முடன், இறங்கிச் செயலாற்றி இன்னல் களைந்திட, முயன்று முனைப்புடன் முன்வரும் ஒருவனை, முதல்வன் ஆக்கினால் மாற்றம்…

உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! சண்டாளக் காசுவந்து செந்தமிழர் ஒற்றுமையைத், துண்டாடிக் கூசாமல் வெந்தழித்து நாசமாக்க, வண்டாடுஞ் சோலைகளும் வாவிகளும் செத்துவீழ, அன்றாடச் சோற்றுக்கு அல்லாடித் திரிந்தாலும், பங்காளிச் சண்டையிலே பகுத்தறிவை இழந்து, இரண்டாக நிற்கின்ற என்னன்புத் தமிழா! குண்டூசி அளவேனும் சிந்தித்துப் பாரடா! முண்டாசுக் கவிஞன் சொன்ன சொற்களை மறந்தாய், மண்டூகப் பேய்களுக்கு வாக்களித்து ஒழிந்தாய்! திண்டாடிச் சீரழியும் தமிழினத்தின் நிலைமைக்கு, என்றேனும் காரணம்யார் என்றெண்ணிப் பார்த்தாயா? வெண்டாக உடல்வெடித்து ஓடாகத் தேய்ந்தாலும், என்போடு சதையொட்டி கூடாக ஆனாலும், “என்பாடு” இதுவல்ல என்று…