பேராசிரியர் வணங்காமுடி, தமிழ்நாடு  அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக திசம்பர் 11 அன்று பதவி ஏற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில்  வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர்  இரு முதுகலைப்பட்டங்கள் , இரண்டு சட்ட முதுகலைப் படிப்பு, இரண்டு முனைவர் பட்டம் ஆகியனவற்றிற்கு உரியவர்.  அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி  அறிவியலராகப் பணியாற்றி…