பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான் – இலக்குவனார் திருவள்ளுவன்)
பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான்) சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் இன்று திடீரென்று ஊடகத்தினரை வரவழைத்தார். அப்பொழுது அவர், முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக வாக்களித்த பன்னீர் அணியைச்சேர்ந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் இப்பொழுது் தகுதி நீக்கம செய்த தினகரன் அணியினரின் தகுதி நீக்கத்தை விலக்கிக் கொள்வதாகவும் தி.மு.க. உறுப்பினர்கள் 21 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “ஆளாளுக்கு அம்மா ஆவி பேசியது, ஆதன்(ஆன்மா) பேசியது என்றெல்லாம் சொல்கிறார்களே! நம்முடன் அம்மா…