பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான். அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது. அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத் தெரிவிப்பதுபோல் நடித்து நரேந்திர(மோடி)யின்…
வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை
வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது. வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம். தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும். …
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன – இராசேசு இலக்கானி
தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் சைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நாளை அதிகாரப்பூர்மாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி தேர்தல் நடத்தைவிதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன எனக்கூறிப் பின்வருமாறு தெரிவித்தார்: தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன *தேர்தல் பரப்புரை ஆற்றுவோர், வெவ்வேறு சாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, இப்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்…
தேர்தல் அட்டவணை 2016, தமிழ்நாடு
2011இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காவது தமிழகச் சட்டசபையின் பதவிக்காலம் 22, மே 2016 அன்று நிறைவடைகிறது. இதனால் 15 ஆம் சட்டமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! – ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் பொதுவாழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் திருச்சி – 620 020, காசா நகர், சமால் முகமது கல்லூரி அருகில் உள்ள வி.எசு.எம். மகாலில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : . புடம்போடப்பட்ட புகழ்மிக்க தலைவர்கள் பிறந்த தமிழ்நாடு, இந்திய நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய பெருமையை ஒரு காலத்தில் பெற்று இருந்தது…