(உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை – தொடர்ச்சி) நல்லுரை சில மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத் துறைசையந்தாதியை அவன் எடுத்துவந்து பாடஞ் சொல்லும்படி தொந்தரவு செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்’ என்று அனுப்பிவிட்டேன். அங்கே தங்களிடம் வந்திருப்பானே?” “வரவில்லை” “அவனைப்போல இன்னும் யாராவது வந்து அருத்தம் சொல்லவேண்டுமென்று உபத்திரவம்பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.” ‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’ அப்போது ஆறுமுகத்தா பிள்ளை…