தோழர் தியாகு எழுதுகிறார் 48: சொல்லடிப்போம், வாங்க! (6)
(தோழர் தியாகு எழுதுகிறார் 47 தொடர்ச்சி) சொல்லடிப்போம், வாங்க! (6) பேராசிரியர் சிவகுமார் எழுதுகிறார்: தோழர் வணக்கம். என்னுடைய மின்னஞ்சல் செய்திக் குவியலால் இயங்கவில்லை. சிலவற்றை நீக்கியபின் உங்கள் தாழி மடல்கள் பெற முடிந்தன. ‘சொல்லடிப்போம்’ வாங்க இரசித்துப் படிக்கிறேன். தாராளியம் சிறப்பான விளக்கம். நீண்ட கட்டுரைகளைத் தவிருங்கள். நல்லது. சுருக்கமாகவே எழுத முயல்கிறேன். பேராசிரியர் சிவக்குமார் கலைச் சொல்லாக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சொல்லடிக்கும் பணியில் அவரும் தொடர்ந்து பங்கேற்க வேண்டுகிறேன். தாழி மடல் எடுத்துள்ள பணிகளில் சொல்லாக்கமும் ஒன்று. எனக்கு விருப்பமானது என்பதால் மட்டுமல்ல,…