விலங்கு மனிதர் – சந்தானம் சுதாகர்

விலங்கு மனிதர்   வலித்திடும், பாசமே வைத்திட அஞ்சிடும், வலியது வாழும் வன வாழ்க்கையை வாழும், விலங்கு மனித உறவுகள் சூழும், கருணை சுரக்கும் மனமே   சந்தானம் சுதாகர்

காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர்

காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர்   கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும் உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம் என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும் இன்று பறந்தது என்வரவு பார்த்தே! சந்தானம் சுதாகர்