சந்திப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

சந்திப்பு   எண்ணத்தின் சந்திப்பு நட்பாய் மலரும் உள்ளத்தின் சந்திப்பு காதலாய்க் கனியும் தாய் தந்தை சந்திப்பு மகவை ஈனும் ஆய்வு செயல் சந்திப்பு அறிவைப் பேணும் அறிஞரின் சந்திப்பு ஆக்கம் அளிக்கும் கலைஞரின் சந்திப்பு ஊக்கம் அளிக்கும் மறவரின் சந்திப்பு வீரம் ஊட்டும் அறத்தார் சந்திப்பு வறுமை ஓட்டும் எழுத்தின் சந்திப்பு சொல்லாய் மாறும் சொல்லின் சந்திப்பு வரியாய் மாறும் வரியின் சந்திப்பு கவியாய் மாறும் கவியின் சந்திப்பு காவியம் ஆகும் உழைப்போர் சந்திப்பு உயர்வைச் சேர்க்கும் விலைமகள் சந்திப்பு இழிவைச் சேர்க்கும்…

உருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

  உருசிய  நாட்டிலுள்ள தமிழறிஞர்கள் சிலர் தமிழாய்வு தொடர்பான சில திட்டப் பணிகள் தொடர்பாகத் தமிழகம் வந்துள்ளனர். மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் உருசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி  (Prof Alexander Dubyanskiy)அவர்களின் தலைமையில் வருகை தரும் இவர்களுடன் சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்கும் ஆசியவியல் நிறுவனம், தை 10, 2049செவ்வாய்க் கிழமை 23-01-2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு (செம்மஞ்சேரியில் அமைந்துள்ள) ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…

ஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை

சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00 புதுச்சேரி  தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.    கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு இது.     இந்நிகழ்வில் ஆறு தலைமுறை ஆசிரிய மாணவப் பரம்பரைப் பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு-  தலைமை:…

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.   அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாகப் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகின்றார்கள்.   இச் சந்திப்புக்களின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின்…

பகுத்தறிவைத் தூண்டுவன புத்தகங்களே!

புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தூண்டுகின்றன.           வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்    கரூர் வைசியா வங்கி மேலாளர் பேச்சு               வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மார்கழி 5(திசம்பர் 20) அன்று நடைபெற்ற ‘சந்திப்பு’ சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.        இவ்விழாவிற்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை…