தமிழ் நன்று என்றிரு! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தமிழ் நன்று என்றிரு! ஒன்று என்றிரு; தமிழ் நன்று என்றிரு. இம்மொழிதான் செம்மொழி எனத் தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு குன்று என்றிரு எம் மொழிவளம் குன்று என்றிரு; பிறமொழி தான்கன்று என்றிரு; நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு . இன்றே தொடங்கியிரு; வன்தமிழராய் நின்றிரு எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;. என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு. கொன்றால் பாவமென்றிரு தின்றால் போகாதென்று மறு; ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ; தமிழால் பேசி நாவென்றிரு; நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,…
சாமியே வள்ளுவனே சரணம் ! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
சாமியே வள்ளுவனே சரணம் ! வள்ளுவன் சரணம்; ஐயன் சரணம் ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே வள்ளுவனே வருக! வாய்மை தருக! வாய்மை தருக! வள்ளுவனே வருக! தாயே சரணம் தந்தையே சரணம் தந்தையே சரணம் தாயே சரணம் ஆதியே சரணம் பகவன் சரணம் பகவன் சரணம் ஆதியே சரணம் தமிழே வருக! குறளே வருக!; குறளே வருக! தமிழே வருக! முப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்; முத்தமிழ் சரணம்; முப்பால் சரணம்; தமிழைப்பாடு தமிழை நாடு குறளும் யாப்பும்…
தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ? மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ ? நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே !! இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம…
தொழுமின்! செழுமின்! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்! விழுமின், உன்னை ஈன்றவர் அடி விழுமின்! தொழுமின், உன்னை மீண்டவர் அடி தொழுமின்! அழுமின், உனக்காக மாண்டவர் நினைந்து அழுமின்! விழுமின், விழாமல் பதவிவர மக்கள் அடி விழுமின! செழுமின், செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்! குழுமின், கூசாமல் பிறமொழி தவிர்த்துக் குழுமின்! இழுமின், இனிக்கும் தமிழ்மொழி உனக்கே என இழுமின்! உழுமின், கழனியில் பணியில் நீர் உழைத்துச் செழுமின்! -சந்திரசேகரன் சுப்பிரமணியம்