தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம் – தொடர்ச்சி) சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் இந்தியாவில் நாம் அடிக்கடி காணக் கூடிய ஒன்றுதான்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர்கள் நல்ல பல அறிவுரைகளை நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கூட வாரி வழங்குவார்கள். கண் கெட்ட பின் சூரிய நமசுக்காரம் என்பது போல் இருக்கும். இலங்கையிலும் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, இந்த ‘முன்னாள்’கள் தங்கள் ‘ஞான தரிசனங்’களுக்கு ஓர் எல்லை வைத்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் இறைமைக்கும்…