விட்டத்தில் இல்லை விடியல்! – – சந்தர் சுப்பிரமணியன்
வளராத பொருளென்று வானுக்குக் கீழ்வாழும் வகையே தில்லை! துளிராக வருகின்ற துளிர்ப்பொன்றே மரமாகித் தொடரும் தோப்பாய்! களராக வாழ்வெல்லாம் கழியுங்கால் விழையெண்ணம் கனவாய்ப் போகும்! தளராத உழைப்புடையார் தாமெண்ணும் உயர்வையெலாம் தமதாய்ச் சேர்ப்பர்! (1) வில்லொன்றின் இலக்கடைய விரைகாற்றைக் கிழித்தன்றோ விலக்கும் அம்பும்! கல்லொன்றில் எறும்பூரக் கால்பட்ட இடந்தேய்த்துக் கரைக்குங் கல்லை! அல்லொன்றின் இருளழிக்க ஆதவனில் செந்தீயாய் அமையுங் கோபம்! செல்கின்ற வழியெங்கும் சிறப்பான உழைப்பிருப்பின் செயந்தான் ஆங்கே! (2) அலையாடும் கடல்சேரும் ஆற்றுக்குத் துளிநீரால் அமைந்த ஆதி! மலையேறும் போதெல்லாம்…