சிறைக்குள் வைத்தே பல நாட்கள் ‘விசாரணை’! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06
(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05 தொடர்ச்சி) சிறைக்குள் வைத்தே பல நாட்கள் உசாவல்! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) 1980-களின் இறுதியில் தமிழகத்தை உலுக்கிய பெயர், ‘பாண்டியம்மாள்’. காணாமல்போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல்துறையிடம் கணவர் முறையிட, அடையாளம் தெரியாத ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு கணவனையே கொலைகாரனாக்கி…