113.மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? ++ 114.கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114
111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? என்பது சரிதானா? -இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி) கிருட்டிணன் கூன்விழுந்த குப்புசாவுடன் தகா முறையில் உறவு கொண்டதாகப் பாகவதம் கூறுகிறது. கிருட்டிணனுக்கு, (உ)ருக்மிணி, சத்தியபாமா, சம்பாவதி, காளிந்தி, மித்திரவிந்தா, நக்குனசிதி, பத்திரா, இலட்சுமணா என்னும் முதன்மை மனைவியர் எனவும் இது கூறுகிறது. இவர்கள் வழி 80 ஆண்மக்கள் இருந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களையும் தருகிறது இப்புராணம். கிருட்டிணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை 16,108. இவர்களின் பிள்ளைகள் 1,80,000. இவ்வாறு கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனினும் கிருட்டிணன் பல பேருடன் உறவு கொண்ட ஒழுக்கமற்றவன்…
110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த…
108.இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்களா? ++ 109.இராமாயணம் சனாதனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறதா? – இலககுவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 இது குறித்துக் குடியாத்தம் குமணன் என்னும் கவிஞர் கூறியுள்ளதைப் பாருங்கள்: “இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்துக்கள்: சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லுகிற வழக்கம் இல்லாத இசுகான் அமைப்பைச் சார்ந்த தீவிர வைணவ இந்துக்களையா….? அதே சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல மறுக்கும் சீயர் மட இந்துக்களையா….? அல்லது இராம நவமிக்கும், கிருட்டிண செயந்திக்கும் வாழ்த்து சொல்லாத காஞ்சி மடாதிபதிகளையா….? மேற்கண்ட இவை எதையுமே எப்போதும்…
106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம் இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நன்னெறியான தமிழ் வேதம் எது? தீ நெறியான ஆரிய வேதம் எது? என்பதைப் புரிந்து நாம் பயன்படுத்த வேண்டும். தமிழ் வேதங்களைப் “புரையில் நற்பனுவல் நால் வேதம்” என்கிறார்…
104? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்கிறதா? 105. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 இந்திய அரசியல் யாப்பு நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் முதலாவது சம உரிமைாகும். இதற்கு மாறாக வருண வேறுபாட்டைக் கூறும் சனாதனம் அரசியல் யாப்பிற்கு எதிரானதுதானே. இந்திய அரசியல் யாப்பு தரும் மற்றோர் அடிப்படை உரிமை தற்சார்பு உரிமையாகும்(Right to freedom) சனாதனம் என்பது பிராமணரையே சார்ந்து இருக்க வேண்டும் என்கிறது. அரசியல் யாப்பிற்கு எதிரான இதை எதிர்ப்பது முறைதானே. “சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன்…
103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே! ? சனாதன நூலான நாட்டிய சாத்திரத்தைப் பார்த்துத்தான் தொல்காப்பியர் எழுதினார். அப்படி என்றால் அவரே சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே பொருள் என்கிறார்களே! “தொல்காப்பியத்தால் பெண்கள் மேம்பாடு அடைந்தார்கள். நாட்டிய சாத்திரத்தால் தேவதாசி முறையும், பெண்ணடிமைத்தனமும், பரத்தமையும் (விபச்சாரமும்) வளர்ந்தன.” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “தொல்காப்பியம் தமிழ் கற்பவர்களுக்கு எழுதப் பட்டது. நாட்டிய சாத்திரம் இந்தியாவில் உள்ள மக்கள் உல்லாசமாக…
101. வருண வரிசை தவறல்ல- ஆர்.வி.ஆர் என்பவர் 102. பிற நாட்டார் சனாதனத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். (பாண்டியன் பரிசு, இயல் : 56) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்கிறார் கண்ணதாசன் (கருப்புப்பணம் திரைப்படப்பாடல்) இவ்வாறு சாதி வேறுபாடற்ற பொருளுடைமைதானே நம் இலக்கு. இதன் அடிப்படையில் மிகச் சரியாகச் சுருக்கமாக இலக்கணமாகச் சனாதனம் குறித்து மு.க.தாலின் எடுத்துரைத்துள்ளார். வருண அடிப்படையில் இன்னார்க்கு…
99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா? 100. அருத்த சாத்திரம் பொதுவான நீதி நூலா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என அருத்த சாத்திரம் கூறுகிறது. தமிழ் நெறியோ பிறன் மனை விழையாமையையும் கற்பொழுக்கத்தையும் வலியுறுத்துகிறது. மரம் முதலியவற்றால் இரவில் இலிங்கங்களைச் செய்து வைத்து, இது பூமியைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றிய சுயம்புலிங்கம் என்று எல்லோருக்கும் அறிவித்து அதற்குத் திருவிழா முதலியவற்றைச் செய்யுமுகமாக மக்களிடமிருந்து பொருளை ஈட்டல் வேண்டும். கடவுள், மரம் முதலியவற்றில் தெய்வம் வீற்றிருக்கிறது என மக்களை நம்ப வைப்பதற்காக,…
97. சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூல் என்கிறார்களே! 98. அருத்த சாத்திரம் திருக்குறளுக்கும் மூத்த நூல் என்பது பொய்யா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 மார்க்கு மக்கினீசு என்னும் அறிஞர், ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’ எனக் கட்டுரை எழுதியுள்ளார்.(Is the Arthasastra a mourian document? by Mark Mcclish) இதில் அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து நூலல்ல, இதன் ஆசிரியராகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கெளடில்யர் சந்திர குப்புத மன்னரின் அமைச்சர் அல்லர், அவருக்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த சிலரால் தொகுக்கப்பெற்றது இந்நூல் என அவர் இதில் நிறுவியுள்ளார். அருத்தசாத்திரத்தைக் கெளடில்யன் என்பான்…
85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 83. 84 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்….
83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? 84.சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 83. 84 ? 83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? சனாதன் (சனாதனம்) என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள், மதத்தை விட்டுவிட்டுப் பொருள் தேடினால் புனிதமான, பழங்கால, மறையாத, நீண்டு நிலைக்கும், என்றைக்கும் பொருத்தமான என்ற துணைச்சொல் என்று விளக்கம் தருகிறார்களே! சனாதனக் குறள், சனாதன இசுலாம் என்று கூடக் கூறலாம். . . . புனித சேவியர், தூய மேரி எனக் கிறித்துவர் சேர்க்கும் துணைச்சொல்தான் ‘சனாதன்’…