மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!
மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு! தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் மாணவர் விசய் வரவேற்றார். தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்ற மாணவிகள் காயத்திரி, உமாமகேசுவரி, தனலெட்சுமி ஆகியோருக்கும், அழைத்துச் சென்ற ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவி சந்தியா நன்றி கூறினார்….