சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம், நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 22, 2048 / பிப்பிரவரி மாதம் 4ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி,பண்பாடு,வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அனைவரும்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23 இன் தொடர்ச்சி) 24 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 தமிழகக் குடியரசு அமெரிக்க நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவர் நம் அண்ணாவைக் காண வரவில்லை. அவர்தம் அன்புச் செயல்களில் கலந்து கொள்ளவில்லை. காரணம் தமிழகம் தனிக்குடியரசாய் விளங்கி தனது அறிவு நிரம்பிய தலைவரை அனுப்பி வைக்கவில்லையே. அந்நாள் விரைவில் தேடிவருமாக என்கிறார் கவிஞர். சப்பானியச் செலவு உழைப்பால் உயர்ந்த நாடு சப்பான், ஓங்கிய பெருமை உடைய நாடு…
நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள் – பொறி. இலக்குவனார் திருவேலன்
நான் அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணியாற்றும்போது சுவையான நிகழ்ச்சிகள் பல நடந்ததுண்டு. அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். முதல் நிகழ்வு ஒரு கிழக்குஆசிய நாட்டில். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருக்கிறேன். அந்த நிறுவனம் எமது வாடிக்கையாளருக்கு ஒரு மிகப் பெரிய, தொடர்-வார்ப்பு உருக்கு ஆலையை (Continuous Casting Plant) உற்பத்தி செய்து அளிக்கும் பணியைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. அன்றைய மதிப்பில் சில நூறுகோடி உரூபாய். தொடர்புடைய எந்திரப் பொருட்கள் அனைத்தும் கப்பலில்…
கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை!
கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை! அனைவருக்கும் இனிய வணக்கங்கள். சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மொழிவளர்ச்சித் துறையின் சார்பாகச் சப்பான் நாட்டின் கவாசாகி நகரில் இயங்கிவரும் கோஅனா பள்ளிக்குச் (Kohana international school) சென்றிருந்தோம். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பள்ளியின் முதல்வருமான திருமதி.பிரியா அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்றார். கோஅனா பள்ளி பன்னாட்டுப் பொதுச் சான்றிதழ்க் கல்விக்கான (IGCS என்னும்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளியாகும். இந்தப்பள்ளியில் நம்முடைய தமிழ்ப்பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஒன்றாகக் கல்வி கற்கிறார்கள் மேலும் கவாசாகி நகரிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நம்முடைய தமிழ்ச்சொந்தங்கள்…
செஞ்சீனா சென்றுவந்தேன் 21 – பொறி.க.அருணபாரதி
(ஐப்பசி 23, 2045 / நவம்பர் 09, 2014 தொடர்ச்சி) 21. கச்சத்தீவும் சீனர்களின் சப்பானிய எதிர்ப்பும் சீன நண்பர்கள் சிலருடன் பேசும் போது, அவர்கள் தமது நாட்டிற்கு யாரை போட்டியாளர்களாகக் கருதுகின்றனர் எனக் கேட்டேன். வெகு சிலரே வட அமெரிக்கா என்றனர். ஒரு சிலர், இரசியா என்றுகூடச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவைப் பற்றி கேட்டால், பலருக்கு ஒன்றும் தெரியவில்லை. இங்கே, தமிழகத்தில், வங்க தேசம்தான் நமக்கு சவால் விட்டு வளரும் நாடு என்று சொன்னால் நாம் எப்படி சிரிப்போம்? அதே போலத்தான்,…