(ஊரும் பேரும் 62 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – விண்ணகரம் – தொடர்ச்சி) சமணமும் சாக்கியமும்எட்டு மலைகள் முன்னாளில் சமண சமயம் தமிழ் நாட்டில் பல பாகங்களிற் பரவியிருந்ததாகத் தெரிகின்றது. சமண முனிவர்கள் பெரும்பாலும் தலைமை நகரங்களின் அருகே தம் தவச் சாலைகளை அமைத்துச் சமயப்பணியாற்றுவாராயினர். பாண்டி நாட்டில், நெடுமாறன் அரசு புரிந்த ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் எங்கும் ஆதிக்க முற்றிருந்த பான்மையைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.1 அக்காலத்தில் மதுரையின் அருகேயுள்ள குன்றுகளைச் சமண முனிவர்கள் தம் உறையுளாகக் கொண்டிருந்தார்கள் என்பது திருஞான சம்பந்தர்…