தோழர் தியாகு எழுதுகிறார்  63

(தோழர் தியாகு எழுதுகிறார் 62 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார்: 1.   இந்திய மாறுதலுக்கான தேசிய நிறுவனத்தின் (NITI) பரிந்துரை வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் அல்லாத பிற துறைகளின் தொழிலாளர்கள் போன்ற பிற நலிந்த பிரிவினரையும் உள்ளடக்கித் தலைமை யமைச்சர்,உழவர் திட்டத்தை அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டமாக மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும், பின்னர் பிற மானியங்களையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும்  இ.மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து பரிந்துரைத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதும் போதாக் குறையானது. ஆண்டிற்கு 6,000 உரூபாய் / மாதத்திற்கு 500 உரூபாயை அடிப்படை வருமானம் என்று குறிப்பிடுவது தகுமா? அதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம் என்று கருதினால் அஃது ஓர் இழிய நகைச்சுவையாகவே, கேலிக் கூத்தாகவே இருக்கும்.  இத்தகைய அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டத்துடன் பிற நல்கைகளையும் இணைத்துக் கொள்ளலாம் எனும் போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. உணவு மானியத்திற்கும், பொது வழங்கல் முறையில் உணவு தானியங்கள் வழங்கும்…

தோழர் தியாகு எழுதுகிறார்  61

(தோழர் தியாகு எழுதுகிறார் 60 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார் பொருளியல்: 1.   தொழிலாளர் உரிமைக் குரல் Ø   இருபது நாடுகள் குழு(G-20) கூட்டமைப்பின் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் அமைப்பாக த20(L 20) உள்ளது. கடும் கண்டனத்துக்குரிய வகையில் தேசியத் தொண்டர் அணி (ஆர்.எசு.எசு.), ஆதரவு இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை  (Bharatiya Mazdoor / Sangh BMS) த -20இன் தலைவராக நியமித்துள்ளது பாசக அரசு. இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.அ.(HMS) முதலான  10 மத்தியத் தொழிற்சங்கங்கள் ஈகியர் நாளான  சனவரி 30ஆம் நாள் தில்லியில் கூடி,…

தோழர் தியாகு எழுதுகிறார்  57; வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி – சமந்தா

(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார்: பொருளியல்: வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி… பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது. அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது.  ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம…