தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! – த.தே.பொ.க.
இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து, தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! தமிழ்த்தேசப்பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை! நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எசு.இ) இயக்குநர் அண்மையில்இந்தியா முழுதும் உள்ள சி.பி.எசு.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது மொழி – வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்குத்…
பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட முதல்வர் கடும் எதிர்ப்பு
பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து, அவர் தலைமையாளருக்கு எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத் துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல் எழுதியுள்ளதை அறிந்தேன்….