தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி) தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார் வாணிகம் கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய…