சமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
சமூகப் புரட்சியாளர் பெரியார் பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா. சபையின் உறுப்பாகிய ‘யுனெசுகோ’ நிறுவனம் ‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிசு; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்குகள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் எதிர்வாதங்களால் ஆராய்ந்து பார்த்துத் தன் அறிவுக்குச்…