(உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-43 சரசுவதி பூசையும் தீபாவளியும் நான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்து சில மாதங்களே ஆயின.சித்திரை மாதம் வந்தேன் (1871 ஏப்பிரல்); புரட்டாசி மாதம் பட்டீச்சுரத்தில்இருந்தோம். இந்த ஆறு மாதங்களில் நான் எவ்வளவோ விசயங்களைத்தெரிந்து கொண்டேன். தமிழ் இலக்கியச் சம்பந்தமான விசயங்களோடுஉலகத்திலுள்ள பல வேறு வகைப் பட்ட மனிதர்களின் இயல்புகளையும்உணர்ந்தேன். செல்வத்தாலும் கல்வியாலும் தவத்தாலும் நிரம்பியவர்களைப்பார்த்தேன். அவர்களுள் அடக்கம் மிக்கவர்களையும், கருவத்தால் தலைநிமிர்ந்தவர்களையும் கண்டேன். உள்ளன்புடையவர்களையும், புறத்தில்மாத்திரம் அன்புடையவர்கள் போல நடிப்பவர்களையும்…