தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (திருவள்ளுவர், திருக் குறள் 813) பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள். குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி,…