திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்
(ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’ – கோதமனார் காலஞ்சென்ற தமிழறிஞர் திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’. என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு…
திருக்குறளும் பொது நோக்கமும் 2 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்
(வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதனைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக்காட்டி, ‘கூடா வொழுக்க’த்திற் கண்டிக்கப்பட்ட போலித் துறவொழுக்கம் உலகத்தாரை ஏமாற்றுவதற்கே உரியது என்பதனையும் உலகத்துக்குப் போதித்து ‘மனத்துக்கண் மாசிலராகிக்’ குணமென்னும் குன்று ஏறி நின்ற திருவள்ளுவர், அனைவரும் ஏற்றுக் கொண்டு கையாளுதற்குரிய ஒழுக்கமுறை வகுத்தது ஒருவியப்பன்று, தம் வாழ்க்கைப் பட்டறிவையே யாம் பெற்ற பேறு பெறுக இவ்வகையம் என்று சுரந்தெழும் அருள் மிகுதியினால், திருவள்ளுவர் அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்க முறையாக…
திருக்குறளும் பொது நோக்கமும் 1
– ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர் சமரசமும், கடவுள் திருமுன் அனைவரும் சமமே என்னும் பொது நோக்கமும் நம் நாட்டில் பேசப்பட்டு நகரங்களில் மட்டுமன்றி சிற்றூர்களிலும் காட்டுத் தீயே போல் பரவி மக்களிடையே உணர்ச்சியையும் பரபரப்பையும் உண்டு பண்ணிவரும் இக்காலத்தில் ‘பொதுமறை’யாகிய திருக்குறளில், இந்நோக்கம் அமைந்திருக்கும் விதத்தை நூல் முழுவதும் பொதுவாக நோக்கிக் கண்டறிவது சாலவும் பொருத்தமுடையதேயாம். இருவகைச் சுவைகள் ஏற்ற அளவிற் கலந்து ஒத்து இயங்குங்கால் ஒருவித புதுச்சுவை தோன்றிச் சுவைப்போர்க்கு மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். அதேபோன்று ஒரு…