அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? கலைஞர் கருணாநிதியின் 94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும் நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள் கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்? அரசியல் தலைவர்கள் தேநீர் அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும்…