என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன் எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்! என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்! என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில் எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்! என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால் என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்! சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும் சரியாகப் பேசியவர் எவரு மில்லை சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச் சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர் நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார் நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார் சமற்கிருதம் செத்தமொழி…